மேலும் செய்திகள்
அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
08-Sep-2026
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது
08-Sep-2026
கரூர்:கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பைபாஸ் முதல், கந்தம்பாளையம் வழியாக ஈரோடு மாவட்டம், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளுக்கு, பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், வேலாயுதம்பாளையம் பைபாஸ் முதல் கந்தம்பாளையம் வரை, சாலை விரிவாக்க பணிகள் நிறைவு பெற்று, சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கப்பட்டது.ஆனால், மின் கம்பங்கள் அமைக்கப்படவில்லை. இதனால், வேலாயுதம்பாளையம் பைபாஸ் முதல், கந்தம்பாளையம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இருளில் இருந்தது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்றனர்.இதனால், வேலாயுதம்பாளையம் பைபாஸ் முதல், கந்தம்பாளையம் விரிவாக்க சாலையில் கம்பங்கள் அமைத்து, மின் விளக்குள் பொருத்த வேண்டும் என, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், வேலாயுதம்பாளையம் பைபாஸ் முதல் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த பகுதியை சேர்ந்த, பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
08-Sep-2026
08-Sep-2026