மின்வாரிய ஊழியர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்
கரூர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர், நேற்று இரண்டாவது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், கேங்மேன் பணியாளர்களுக்கு, கள உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும், கேங்மேன் பணியாளர்களுக்கு உள் முகத்தேர்வில் வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.கரூர் கிளை சார்பில், திட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமையில், மின்வாரிய மேற்பார்வை தலைமை பொறியாளர் அலுவலகம் முன், நேற்று காத்திருப்பு போராட்டம் இரண்டாவது நாளாக நடந்தது.அதில், ஏராளமான மின் ஊழியர்கள் பங்கேற்றனர்.