உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கரூர்: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, கரூர் கிளை சார்பில், திட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக, 5,000 ரூபாய் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநில துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் தனபால், திட்ட செயலாளர் நெடுமாறன், சி.ஐ.டி.யு., தலைவர் ஜீவானந்தம் உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை