உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் ரயில்வே ஸ்டேஷன் எதிரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

கரூர் ரயில்வே ஸ்டேஷன் எதிரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

கரூர், கரூர் ரயில்வே ஸ்டேஷன் எதிரில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.கரூர் பஸ் ஸ்டாண்ட், கோவை ரோடு, தின்னப்பா தியேட்டர் ரோடு, பழைய திண்டுக்கல் ரோடு, ஜவஹர் பஜார் மற்றும் உழவர் சந்தை பகுதிகளில், அதிகளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவைகளை அகற்ற வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று, கரூர் ரயில்வே ஸ்டேஷன் எதிரில் ரத்தனம் சாலை இரட்டை வாய்க்கால் அருகில் இருந்த ஆக்கிரமிப்புகளை, அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். அங்கு, கடைகளின் வெளியே போடப்பட்டிருந்த மேற்கூரைகள் அனைத்தும் அகற்றப்பட்டன.கரூர் நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஜவஹர் பஜார், மனோகரா கார்னர், கோவை சாலை, உழவர் சந்தை சாலை, தின்னப்பா கார்னர் சாலையில், நடைபாதையில் பல்வேறு வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி