உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஈரோடு-செங்கோட்டை ரயில் 9 நாட்களுக்கு மாற்றம்

ஈரோடு-செங்கோட்டை ரயில் 9 நாட்களுக்கு மாற்றம்

சேலம், ஈரோடு-செங்கோட்டை ரயில், 9 நாட்களுக்கு திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல்-மதுரை இடையே உள்ள வாடிப்பட்டி பகுதியில், புதிய குறுக்குவழித்தடம் அமைத்தல் மற்றும் சிக்னல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே ஜூலை 17, 18, 19, 20, 21, 23, 24, 25, 26 தேதிகளில் மதியம், 2:00 மணிக்கு கிளம்பும் ஈரோடு-செங்கோட்டை ரயில், திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். திண்டுக்கல் முதல் செங்கோட்டை வரையிலான சேவை ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்க ரயிலான செங்கோட்டை-ஈரோடு ரயில், மேற்கண்ட நாட்களில், திண்டுக்கல்லில் இருந்து கிளம்பும். செங்கோட்டை முதல் திண்டுக்கல் வரை சேவை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை