உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினர் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினர் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

கரூர் முன்னாள் ராணுவ வீரர்கள் குடும்பத்தினர், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில், http://exwel.tn.gov.inஎன்ற இணைய தளத்தில் விபரங்களை தெரிவித்து கொள்ளலாம். கல்லுாரி சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தில், முன்னாள் ராணுவ வீரர் படைவிலகல் சான்று மற்றும் நகல், பிளஸ் 2, 10-ம் வகுப்பு பள்ளி மாற்று சான்றிதழ் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு முன்னாள் ராணுவ வீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-29 60579 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி