விதை பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
கரூர்:கரூர் மாவட்ட விவசாயிகள், விதையின் ஈரப்பதம் அறிந்து சேமிக்க வேண்டும் என, கரூர் விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:இந்திய குறைந்தபட்ச விதை அளவீடு பரிந்துரைத்த அளவில், விதையின் ஈரப்பதம் அறிந்து சேமிக்க வேண்டும். விதை அதிக முளைப்பு திறனுடன் இருக்கவும், உரிய காலம் வரை சேமிக்கும் வகையில் இருக்க வேண்டும். விதை பரிசோதனை நிலையத்தில் புறத்துாய்மை, ஈரப்பதம், முளைப்பு திறன், பிறரக கலப்பு என, நான்கு விதமான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் அதிக மகசூல் பெற்று, லாபம் பெறவும், விதை இடுபொருள் செலவை குறைக்கவும், கரூர் மாவட்ட விவசாயிகள் தங்களிடம் உள்ள விதைகளை, விதை மாதிரி ஒன்றுக்கு, 80 ரூபாய் செலுத்தி கரூர் காந்தி கிராமம் தின்னப்பா நகரில் உள்ள, விதை பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து கொள்ளலாம். விதை பரிசோதனை வாய்ப்பை, கரூர் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.