உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விதை பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

விதை பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

கரூர்:'கரூர் மாவட்ட விவசாயிகள், விதையின் ஈரப்பதம் அறிந்து சேமிக்க வேண்டும்' என, கரூர் விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:விவசாயத்தில் தரமான விதைகளை, விதைப்பதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும். விதை பரிசோதனை நிலையத்தில் புறத்துாய்மை, ஈரப்பதம், முளைப்பு திறன், பிற ரக கலப்பு என, நான்கு விதமான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதன் மூலம், தரமான விதைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய, பரிசோதனை முடிவுகள் பயன்படுகின்றன. எனவே, கரூர் மாவட்ட விவசாயிகள் தங்களிடம் உள்ள விதைகளை, விதை மாதிரி ஒன்றுக்கு, 80 ரூபாய் செலுத்தி, கரூர் காந்தி கிராமம் தின்னப்பா நகரில் உள்ள, விதை பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து கொள்ளலாம். விதை பரிசோதனை வாய்ப்பை, கரூர் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ