சிறுதானிய இயக்க திட்ட நிதியுதவி விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
சிறுதானிய இயக்க திட்ட நிதியுதவிவிவசாயிகள் விண்ணப்பிக்கலாம்கரூர், அக். 18-சிறுதானிய இயக்க திட்ட நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில், சிறுதானிய இயக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், கிராமப்புற இளைஞர்கள், வேளாண் தொழில்முனைவோர் ஆகியோர் நிதி உதவி பெறலாம். தானியம் சுத்தம் செய்யும் இயந்திரம், கல் மற்றும் துாசி நீக்கும் இயந்திரம், தோல் நீக்கும் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம், தானியத்தை நிறம் பார்த்து பிரிக்கும் இயந்திரம், தானிய மெருகூட்டும் இயந்திரம், சிப்பம் இடும் இயந்திரம், எடை இடும் இயந்திரம் ஆகியவற்றை வாங்க, 75 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ஒரு மையத்திற்கு, 18.75 லட்சம் ரூபாய் பெறலாம். திட்ட மதிப்பீட்டில் பயனாளிகளின் பங்களிப்பு குறைந்தபட்சம், 10 சதவீதத்தோடு வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ், வட்டி மனியமும் பெறலாம். ddab.gmail.comஎன்ற இ.மெயில் முகவரியிலும், வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்), ராயனுார் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.