உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தென்கரை பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி

தென்கரை பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கரூர், மாயனுார் கதவணையில் இருந்து, குறுவை சாகுபடிக்காக, தென்கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.டெல்டா பாசன பகுதிகளில், குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன், 12ல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது, கடைமடை பகுதியான நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு, தண்ணீர் கடந்த வாரம் சென்றது.இதனால், கிளை பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கும்படி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, கரூர், திருச்சி மாவட்டங்களில், முக்கியமான, 17 கிளை வாய்க்கால்களில், படிப்படியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.கரூர் மாவட்டம், மாயனுார் கதவணையில் இருந்து தென்கரை வாய்க்காலில், முதல் கட்டமாக வினாடிக்கு, 500 கன அடி தண்ணீர் குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் தென்கரை வாய்க்கால் பாசன பகுதியில், மகிழ்ச்சியுடன் சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர்.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மாயனுார் கதவணைக்கு வினாடிக்கு, 31 ஆயிரத்து, 169 கன அடி தண்ணீர் வந்தது.குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், 30 ஆயிரத்து, 349 கன அடியும், கீழ் கட்டளை வாய்க்காலில், 300 கன அடியும், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 20 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. * க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 23.95 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி