உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சூரியகாந்தி சாகுபடியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்

சூரியகாந்தி சாகுபடியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்சாயத்துக்குட்பட்ட வேப்பங்குடி, கந்தன்குடி, சிவாயம், குப்பாச்சிப்பட்டி, தேசியமங்-களம் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதனால் விளைநிலங்களில் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து விவசாயிகள் வருமானம் ஈட்டி வருகின்றனர். தற்போது நெல் அறுவடை பணி முடிந்துள்ளது. கோடையில் மாற்று பயி-ராக, சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வரு-கின்றனர். கிணற்று பாசனம் மூலம் சூரியகாந்தி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். தற்போது செடிகள் நன்கு வளர்ந்து காணப்-படுகிறது. சில வாரங்களில் செடிகளில் பூக்கள் பூத்து, விதைகள் பிடிக்கும். அதன்பின் அறுவடை செய்து விதைகளை பிரித்து விற்-பனை செய்யப்படும். இதற்கு குறைந்தளவே செலவாகும். ஆனால் நல்ல வருமானம் ஈட்டலாம் என, விவசாயிகள் தெரிவித்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ