உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / எள் விலை சரிவால் விவசாயிகள் கவலை

எள் விலை சரிவால் விவசாயிகள் கவலை

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட சிவாயம், பாப்பகாப்பட்டி, வேப்பங்குடி, குப்பாச்சிப்பட்டி, பஞ்சப்பட்டி, மலையாண்டிப்பட்டி, பழையஜெயங்கொண்டம், புதுப்பட்டி, சேங்கல், லட்சுமணம்பட்டி, சரவணபுரம், வயலுார், குழந்தைப்பட்டி, கோடங்கிப்பட்டி, திருமேனியூர் ஆகிய பகுதிகளில், விவசாயிகள் பரவலாக மானாவாரி நிலங்களில் எள் சாகுபடி செய்திருந்தனர். தொடர் மழையால், செடிகள் வளர்ந்து பூக்கள் பூத்து, காய்கள் பிடித்துள்ளன. மேலும், விளைச்சலடைந்துள்ள எள் செடிகளை, விவசாய கூலி தொழிலாளர்கள் கொண்டு அறுவடை செய்யப்படுகிறது.தொடர்ந்து, வெயிலில் உலர்த்தப்பட்டு, துாய்மை செய்து விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, ஒரு கிலோ மானாவாரி எள், 130 ரூபாய்க்கு விற்றது. தற்போது, வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு, ஒருகிலோ எள், 100 ரூபாய் என்ற விலையில் வாங்கி செல்கின்றனர். 72 கிலோ எடை கொண்ட மூட்டை ஒன்று, 7,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த விலையில் வியாபாரிகள் வாங்கி செல்வதால், விவசாயிகள் போதிய லாபமின்றி கவலையடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ