உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பெண் தொழிலாளி ரயில் மோதி பலி

பெண் தொழிலாளி ரயில் மோதி பலி

குளித்தலை, குளித்தலை அடுத்த, மருதுார் கிராமத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி செல்வராஜ், 55. இவரது மகள் திரிஷா, 23, டெக்ஸ் கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை, தனது வீட்டின் அருகில் உள்ள ரயில்வே இருப்பு பாதையில், இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது கரூரிலிருந்து திருச்சி நோக்கி சென்ற சரக்கு ரயில் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். திரிஷாவின் பெற்றோர், உறவினர்கள், கிராம மக்கள் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து, திருச்சி ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ