உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நெற்பயிர்களுக்கு உரமிடும் பணி தீவிரம்

நெற்பயிர்களுக்கு உரமிடும் பணி தீவிரம்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி, மகாதா-னபுரம், மகிளிப்பட்டி, நந்தன்கோட்டை ஆகிய பகு-திகளில் விவசாயிகள் விளை நிலங்களில் நெல் சாகுபடி செய்துள்ளனர்.இதில், ஆந்திரா நெல் சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. பயிர்களுக்கு தேவையான தண்ணீர், வாய்க்கால் நீர் கொண்டு பாய்ச்சப்படுகிறது. தற்போது, நெற் பயிர்கள் பசுமையாக வளர்ந்து காணப்படுகிறது. மேலும், பூச்சி தாக்குதல் இன்றி பயிர்கள் வளர்வதற்கும், விளைச்சல் அதிகரிக்-கவும் இயற்கை முறையிலான உரம் ஈடும் பணிகள் நடக்கிறது. இதில், வேப்பம் புண்ணாக்கு மற்றும் கலப்பு உரம் ஆகியவை தெளிக்கப்படுகி-றது.இதன் மூலம் நெற்பயிர்கள் செழிப்பாக வளர்ந்து, கூடுதல் மகசூல் கிடைக்கும் வகையில் விவசா-யிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை