உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / த.வெ.க., கூட்டத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதி வழங்கல்

த.வெ.க., கூட்டத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதி வழங்கல்

கரூர், ;கரூரில் நடந்த, த.வெ.க., கூட்டத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு, சென்னை ஜேப்பியார் தொழில் நுட்ப கல்லுாரி சார்பில், நிதியுதவி வழங்கப்பட்டது.கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த த.வெ.க., கூட்டத்தில் உயிரிழந்த, 41 பேரின் குடும்பங்களுக்கு மாதந்தோறும், 5,000 ரூபாய் உதவித்தொகை, (வாழ்நாள் முழுவதும்) வேலை வாய்ப்பு, ஆயுள் காப்பீடு செய்து தரப்படும் என, த.வெ.க., பிரமுகரும், சென்னை ஜேப்பியார் தொழில் நுட்ப கல்லுாரி தலைவருமான மரிய வில்சன் அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று கரூர் வடிவேல் நகரில் உள்ள, காவலர் குடியிருப்பில் த.வெ.க., கூட்டத்தில் உயிரிழந்த சுகன்யாவின் கணவர் போலீஸ் ஏட்டு தேவேந்திரனிடம், ஜேப்பியார் தொழில் நுட்ப கல்லுாரி நிர்வாகிகள், 5,000 ரூபாய் நிதியை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து, மற்ற உயிரிழந்த குடும்பத்தினருக்கும் நிதி உதவி வழங்க, ஜேப்பியார் தொழில் நுட்ப கல்லுாரி நிர்வாகிகள் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை