உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மின் கசிவால் வீட்டில் தீ விபத்து பிரிட்ஜ், ஆவணங்கள் எரிந்து சாம்பல்

மின் கசிவால் வீட்டில் தீ விபத்து பிரிட்ஜ், ஆவணங்கள் எரிந்து சாம்பல்

குளித்தலை, குளித்தலை அருகே, மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், மின்சாதன பொருட்கள் மற்றும் ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின. குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., தென்கடை குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முத்து வீரன், 65, மனைவி சுசீலா, 61. நேற்று முன்தினம் மதியம், 1:30 மணியளவில் இவரது வீட்டில் மின் கசிவு எற்பட்டு தீப்பற்றி எரிந்தது. முசிறி தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் வீடு முழுவதும் எரிந்தது. இதில் பிரிட்ஜ், ஏசி, பேன், வாஷிங் மிஷின், டிவி உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. மேலும், துணிகள், பீரோவில் இருந்த பணம், தங்க நகை, நிலம் பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாயின். வெளியூர் சென்றிருந்த தம்பதியர், திரும்ப வந்து பார்த்தபோது கதறி அழுதனர். லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளது.டவுன் பஞ்., தலைவர் ராஜேஸ்வரி, துணைத்தலைவர் அன்பழகன், டவுன் பஞ்., செயல் அலுவலர் காந்த ரூபன் ஆகியோர், தம்பதியருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை