மேலும் செய்திகள்
தாய் மாயம்; மகள் புகார்
26-Jun-2025
கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, குடிசை வீட் டில் தீ விபத்து ஏற்-பட்டது.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தளவாப்பாளையம் அருகே, பிலிப் நகரை சேர்ந்தவர் வேலுசாமி, 50; இவர், குடும்-பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, காற்று பலமாக வீசியதால், தீ வேகமாக பரவியது. தகவல் அறிந்த, வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.ஆனால், வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் நாசமாகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
26-Jun-2025