தீயணைப்புத் துறை சார்பில் செயல் முறை விளக்க முகாம்
குளித்தலை, குளித்தலை, கடம்பர்கோவில் காவிரி ஆற்று படுகையில், முசிறி தீயணைப்பு துறை சார்பில், வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை மீட்பது மற்றும் சாலை விபத்து, தீ விபத்து, கிணற்றில் உயிரிழந்த, தவறி விழுந்த கால்நடைகள், மனிதர்களை மீட்பது. தீ விபத்துகளில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்து, செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. வெள்ளத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கான உபகரணங்களின் பயன்பாடு குறித்து, முசிறி தீயணைப்பு நிலைய அலுவலர் கர்ணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் செய்து காட்டினர். சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ, தாசில்தார் இந்துமதி, நகராட்சி கமிஷனர் நந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், அசோகன் மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து கேட்டு அறிந்தனர்.