உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மீன் வளர்ப்பு மானியம் கரூர் கலெக்டர் தகவல்

மீன் வளர்ப்பு மானியம் கரூர் கலெக்டர் தகவல்

கரூர், மீன் வளர்ப்புக்கு மானியம் வழங்கப்படுகிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்ட மீன் வளர்ப்பு விவசாயிகள், மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு, ஒரு ஹெக்டேர் பரப்பளவு மீன் பண்ணைக்கு, 10,000 மீன் குஞ்சுகளுக்கு, 5,000 ரூபாய்- மானியம் வழங்கப்படவுள்ளது. 2025--26ம் ஆண்டிற்கு மீன் வளர்ப்பு உள்ளீட்டு மானியமாக வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, கரூர் மீனவர் நலத்துறை ஆய்வாளர் அலுவலகம், 35/பி/8 A, கருப்பகவுண்டன் புதுார், பசுபதி பாளையம், கரூர் என்ற முகவரியிலும், 80563 13868 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை