உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஐவர் கால்பந்து போட்டி: பள்ளப்பட்டி பள்ளி முதலிடம்

ஐவர் கால்பந்து போட்டி: பள்ளப்பட்டி பள்ளி முதலிடம்

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டியில், தனியார் நிறுவனம் சார்பில், ஐவர் மட்டுமே கலந்துகொள்ளும் கால்பந்து போட்டியை நடத்தியது. இதில், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், பழனி தாராபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கால்பந்து அணிகள் கலந்து கொண்டன. இப்போட்டியில் பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி கால்பந்து அணி, 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், முதல் போட்டியில், ஈசநத்தம் ஹாஜி மீரா அகாடமி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.இதேபோல், பழனி அன்னை ஸ்போர்ட்ஸ் அணியை எதிர்கொண்டு, 3-1 கோல் எடுத்து வெற்றிபெற்றது. இறுதி போட்டியில், நாமக்கல் மெஜஸ்டிக் அணியை வீழ்த்தி, முதலிடம் பிடித்தது. வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஹாஜி கஜனபர் அலி, தலைமை ஆசிரியர் முகமது இஸ்மாயில், உதவி தலைமை ஆசிரியர்கள் தாஜுதீன், பள்ளப்பட்டி எஜுகேஷன் சொசைட்டியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ