உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இலவச வீட்டுமனை பட்டா சப்-கலெக்டர் நேரில் ஆய்வு

இலவச வீட்டுமனை பட்டா சப்-கலெக்டர் நேரில் ஆய்வு

குளித்தலை: குளித்தலை தாலுகா, தோகைமலை யூனியன் பகுதியில் வீட்டு-மனை பட்டா இல்லாமல் குடியிருப்புகளில் குடியிருந்து வருபவர்-களுக்கு, வரைமுறைப்படுத்தி, இணையவழியில் பதிவேற்றம் செய்து, இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது சம்மந்தமாக குளித்தலை சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ நேரில் ஆய்வு செய்தனர்.வீட்டு மனை பட்டா இல்லாமல், வீடுகள் அமைத்து குடியி-ருந்து வரும் நபர்களை ஆய்வு செய்து, அவர்களுக்கு வரைமு-றைப்படுத்தி, இணையவழியில் பதிவேற்றம் செய்து, இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான ஆய்வு பணி, குளித்தலை தாசில்தார் இந்துமதி மேற்பார்வையில், தோகைமலை ஆர்.ஐ. முத்துக்கண்ணு, நங்கவரம் ஆர்.ஐ., பானுப்-ரியா ஆகியோர் தலைமையில் அனைத்து கிராம வி.ஏ.ஓ.,க்கள் முன்னிலையில் ஏற்கனவே நடைபெற்றது.இந்நிலையில், குளித்தலை சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ நேரில் ஆய்வு மேற்கொண்டார். கழுகூர், பொருந்தலுார், கல்லடை, பாதி-ரிப்பட்டி, சேப்ளாப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராமங்க-ளுக்கு நேரில் சென்று, நுாற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளை சந்-தித்து விசாரனை மேற்கொண்டார்.பின்னர் அவர்கள் வசிக்கும் குடியிருப்புகளின் பழைய ஆவ-ணங்களை ஆய்வு செய்தார். குடியிருந்து வரும் வீடுகளுக்கு பட்டா இல்லை என்று உறுதி செய்யும் நிலையில், அவர்களுக்கு வரைமுறை படுத்தி இணையவழியில் பதிவேற்றம் செய்து, இல-வச வீட்டுமனை பட்டா பதிவு செய்யப்பட்டு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !