மேலும் செய்திகள்
தீவன பெருக்க திட்டம் பதிவு செய்ய அழைப்பு
16-Oct-2024
பசுந்தீவன வளர்ப்பு திட்டத்தில்இலவச இடுபொருட்கள்கரூர், அக். 24-பசுந்தீவன வளர்ப்பு திட்டத்தில், இலவசமாக இடுபொருட்கள் வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், பசுந்தீவன பற்றாக்குறையை போக்குவதற்காக, மானாவாரியில் பசுந்தீவன வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், பசுந்தீவனம் வளர்ப்பதற்கு, 40 ஏக்கர் பரப்பளவில் தலா, 0.25 ஏக்கரில் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு இலவசமாக, 1,375 ரூபாய்- மதிப்புள்ள இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது. மானாவாரியில், 100 ஏக்கர் பரப்பளவில் தலா, 0.5 ஏக்கரில் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு இலவசமாக, 1,500 ரூபாய் மதிப்புள்ள இடுபொருட்கள் வழங்கப்படவுள்ளது.தீவன விரயத்தை தடுப்பதற்காக புல் நறுக்கும் கருவி, 50 சதவீதம் மானியத்தில், 70 எண்ணம் வழங்கப்படவுள்ளது. தங்கள் பகுதியில் உள்ள, கால்நடை உதவி மருத்துவரை நேரில் அணுகி பயன் பெற, விருப்பமுள்ள திட்டங்களை குறிப்பிட்டு, எழுத்து மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
16-Oct-2024