மேலும் செய்திகள்
கோடைகால பயிற்சி முகாம் ஏப்.,25 முதல் துவக்கம்
18-Apr-2025
கரூர்: கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளை-யாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான கோடை விடுமுறை பயிற்சி முகாம் நடக்கிறது. இங்கு, தடகளம், வாலிபால், ஜூடோ, ஹாக்கி, கூடைப்பந்து, கபடி, கால்பந்து ஆகிய ஏழு விளையாட்டு போட்டிகளுக்கு மே 15 வரை, சிறந்த பயிற்றுநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.பள்ளி, கல்லுாரி மாணவர் மற்றும் மாணவர்கள் அல்லாத, 18 வயதிற்கு கீழ் உள்ள இளைஞர்கள் என மொத்தம், 117க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு, முற்றிலும் இலவசமாக இப்பயிற்சி வழங்கப்படுகிறது. கலந்துகொள்ளும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். விளை-யாட்டு பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியருக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்-டுள்ளது.இனியும் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் நேரடியாக ஆதார் கார்டு நகலுடன் வந்து பதிவு செய்த பின், பயிற்சியில் பங்-கேற்கலாம் என, கரூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் குணசே-கரன் தெரிவித்தார்.
18-Apr-2025