மேலும் செய்திகள்
தீபாவளி பலகாரம் உரிமம் பெற்று தயாரிக்க அறிவுரை
06-Oct-2025
கரூர், கரூர் மாவட்ட கலெக்டர்தங்கவேல் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு பலகாரங்கள், காரம், கேக் ஆகியவற்றை தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற்றிக்க வேண்டும். தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பான உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான வர்ணங்களையோ உபயோகிக்கக் கூடாது.தரமற்ற பொருட்கள் மற்றும் உணவு எண்ணெய் பலமுறை பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு, லேபிளில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதி தேதி, சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகிய முழு தகவல்கள் அவசியம் குறிப்பிட வேண்டும். உணவு பொருட்கள் தொடர்பான புகார்களை, 94440 42322- என்ற மொபைல் எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
06-Oct-2025