உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தனியார் நிறுவனத்தில் ஜெனரேட்டர் மாயம்

தனியார் நிறுவனத்தில் ஜெனரேட்டர் மாயம்

கரூர், நவ. 19-கரூர் அருகே, தனியார் நிறுவனத்தில் ஜெனரேட்டரை காணவில்லை என, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தனியார் மொபைல் போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது. அதில், வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர், 1, பேட்டரி, 2, ஜெனரேட்டர் ஏ.சி., 1 ஆகியவற்றை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இவற்றின் மதிப்பு, ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய்.இதுகுறித்து, தனியார் நிறுவன மேலாளர் ஜெயக்குமார், 40; போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ