உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிறுமிக்கு திருமணம்: மூவர் கைது

சிறுமிக்கு திருமணம்: மூவர் கைது

ஈரோடு: தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் ரமேஷ், 25; இவருக்கு தர்மபுரியை சேர்ந்த, 16 வயது சிறுமியை, சத்தி அருகே பண்ணாரி மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து வைத்தனர்.அவர்களிடம் இருந்து தப்பிய சிறுமி, சைல்டு லைனில் புகார் தெரிவித்தார். இதுகுறித்த புகாரின்படி பவானி அனைத்து மகளிர் போலீசார், ரமேஷ், அவரது தந்தை வடிவேல், திருமணத்துக்கு உடந்தையாக இருந்த ராணி, ஜோதிமணி, சங்கீதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையை தொடர்ந்து ரமேஷ், 25, ஜோதிமணி, சங்கீதா என மூன்று பேரை, சத்தி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி