மேலும் செய்திகள்
சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை
26-Jan-2025
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் யூனியன், சிவாயம் பஞ்சாயத்து, இரும்பூதிப்-பட்டி, சந்தையூரில் வாரந்தோறும் சனிக்கிழமை சந்தை கூடுகி-றது. காலையில் ஆடு, கோழி விற்பனையும், மாலையில் காய்கறி விற்பனையும் நடைபெறும். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள், விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு, கோழிகளை கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். கடந்த வாரம் முதல் ஆடு, கோழி விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன்-படி, நேற்று கூடிய சந்தையில், 7 கிலோ ஆடு, 6,000 ரூபாய்க்கும், நாட்டுக்கோழி கிலோ, 450 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. கரூர், குளித்தலை, லாலாப்பேட்டை, பஞ்சப்-பட்டி பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்து ஆடு, கோழிகளை வாங்கி சென்றனர். இதனால் வியாபாரம் தீவிரமாக நடந்தது.
26-Jan-2025