நாய்கள் கடித்து ஆடு பலி
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, பள்ளப்பட்டியில் உள்ள சுக்கான் குழி பகு-தியை சேர்ந்தவர் சதாப். இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் மேய்த்து கொண்டிருந்த ஆடுகளில் ஒன்று, வழி தவறி சென்றுள்ளது.அந்த ஆட்டை, நான்கு நாய்கள் சேர்ந்து கடித்துக் குதறிய, 'சிசி-டிவி' காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாய்களை கட்டுப்படுத்த கோரி, பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் நகராட்சி நிர்வாகம் தற்போது வரை எடுக்கவில்லை என, பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.