உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நாய்கள் கடித்து ஆடுகள் பலி

நாய்கள் கடித்து ஆடுகள் பலி

காங்கேயம்: காங்கேயத்தை அடுத்த குள்ளம்பாளையம் செட்டிகாட்டு தோட்-டத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 65; தோட்டத்தில், 30 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை மேய்ச்சலுக்காக தோட்டத்தில் விட்டிருந்தார். அப்போது தெருநாய்கள் கடித்ததில் ஐந்து ஆடுகள் பலியாகின. ஐந்து ஆடுகள் காயமடைந்தன. அப்ப-குதியை சேர்ந்த மணி என்பவரின் நாய் கடித்துதான் ஆடுகள் இறந்ததாக கூறி, அவரது வீட்டின் முன்னால் ஆடுகளை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல வீரணம்பாளையம் ஊராட்சி சூலக்கல் புதுாரில், சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான பட்டியில் நேற்று காலை புகுந்து நாய்கள் கடித்ததில் ஒரு ஆடு பலியானது. இரண்டு குட்-டிகள் காணாமல் போனது. இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை