உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மத்திய அரசின் தேசிய திறனாய்வு தேர்வு வாங்கல் அரசு பள்ளி மாணவி முதலிடம்

மத்திய அரசின் தேசிய திறனாய்வு தேர்வு வாங்கல் அரசு பள்ளி மாணவி முதலிடம்

கரூர்: மத்திய அரசின் தேசிய திறனாய்வு தேர்வில், வாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கர்னிகா, மாவட்ட அளவில் முத-லிடம் பெற்றுள்ளார்.நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள், இடைநிற்றலை கைவிட்டு உயர்கல்வி கற்க உதவியாக இருக்கவும், மேல்நிலைக் கல்வி தடைபட்டு விடக்கூடாது என்ற நோக்கில், மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) நடத்தி வருகிறது.இந்த உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடி-யாக செலுத்தப்படும். தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 9 முதல் பிளஸ் 2 வரை நான்கு ஆண்-டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.கடந்த, பிப்., 22ல் தேசிய திறனாய்வு தேர்வு நடந்தது. கரூர் மாவட்டத்தில், 37 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், வாங்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எட்டு பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவி கர்னிகா, 180க்கு 131 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். மேலும் ஷமிதா, வைஷ்ணவி, ஜனனி ஸ்ரீ, ஹரிதா ஸ்ரீ, யாழினி, தன் ஸ்ரீ, ஹனிஸ்கா ஆகிய மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி