கடவூரில் 250 ஏக்கரில் சிப்காட் அமைக்க அரசு இடம் தேர்வு
கரூர்: ''கரூர் மாவட்டம், கடவூர் பகுதியில், 250 ஏக்கரில் புதிய சிப்காட் அமைக்க, இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது,'' என, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.கரூர் மாநகராட்சி, 48-வது வார்டு கோடங்கிப்பட்டியில், சட்டச-பைதொகுதி மக்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதை கரூர் தி.மு.க., எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி தொடங்கி வைத்த பின், நிருபர்களிடம் கூறியதாவது:கரூர் மாவட்டம் கடவூர் பகுதியில், 250 ஏக்கரில் புதிய சிப்காட் அமைக்க அரசு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அரசு ஒப்புதல் வழங்கும். கரூரில் ஐ.டி., பார்க் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அரவக்குறிச்சியில், திண்-டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், 6.5 ஏக்கர் பரப்பளவில் முருங்கை பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.கரூர் மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளில், 460 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை பணி, 260 கோடியில் குடிநீர் திட்-டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. கரூர் திருமாநிலையூர் புதிய பஸ் ஸ்டாண்டில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, அ.தி.மு.க.,வினர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். போக்குவரத்து, மாநகராட்சி அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்-பட்டு வருகிறது. புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, பழைய பஸ் ஸ்டாண்ட், 1.5 கி.மீ., தொலைவில் தான் உள்ளது. மக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் அமைந்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைப்பதாக கூறி நிதி ஒதுக்க-வில்லை. தி.மு.க., ஆட்சியில் திருமாநிலையூரில், 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, உச்சநீதிமன்றம் வரை சென்று உத்தரவு பெற்று பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது.கடந்த ஆட்சியில் மாநகராட்சி பகுதியில், 15 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. அப்போது, விபத்தில் பதவிக்கு வந்தவர்கள், அந்த நிதியை தங்கள் நிறுவனம் பெயரில், ஒப்பந்தம் பெற்று சாலை அமைத்து விட்டனர். தற்-போது மேம்பாலம் அமைக்க மண் பரிசோதனை செய்யப்பட்டுள்-ளது. விரைவில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்-படும்.இவ்வாறு, அவர் கூறினார்.