உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு ஐ.டி.ஐ.,யில் பசுமை பூங்கா திறப்பு

அரசு ஐ.டி.ஐ.,யில் பசுமை பூங்கா திறப்பு

கரூர்: கரூர் அருகேயுள்ள, வெண்ணைமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சார்பில் கழிப்பறை, பசுமை பூங்கா திறக்கப்பட்டது.முதன்மை பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் தலைமை வகித்தார். சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு உதவிகளை தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலை-யத்தில், 8.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிப்பறை, சுத்திகரிக்கப்-பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம், விளையாட்டு உபகரணங்கள், பசுமை பூங்கா போன்ற பணிகள் செய்து தரப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், காகித நிறுவனத்தின் முதன்மை மேலாளர் (மனித வளம்) சிவக்-குமார், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மனோகர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ