ரூ.6.33 கோடி மதிப்பில் புதிய திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
கரூர், கரூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில், 6.33 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்ட பணிகளுக்கு இன்று பூமி பூஜை நடக்கிறது.கரூர் எம்.எல்.ஏ.,செந்தில்பாலாஜி தொடங்கி வைக்கிறார். அதில், காதப்பாறை பஞ்சாயத்தில் மாங்காசோளிபாளையம் ரயில்வே கேட் வழியாக புதிய சாலை, வெண்ணைமலை சேரன் பள்ளி முதல் கரூர் வாங்கல் சாலை, மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி பஞ்., சங்கரம் பாளையத்தில் நிழற்கூடம், கரூர் வாங்கல் சாலையில் இருந்து எல்லைமேடு குட்டைமரம் பிரிவிற்கு சங்கரம்பாளையம் வழியாக சாலை மேம்பாட்டு பணி.மற்றும் மின்னாம்பள்ளி நிழற்கூடம், நெரூர் வடபாகம் பஞ்., முனியப்பனுார் ஆதிதிராவிடர் தெருவில் நாடக மேடை அமைத்தல், சேனப்பாடியில் உள்ள சமுதாய கூடத்திற்கு கூடுதல் கட்டடம் அமைத்தல், நெரூர் தெற்கு பஞ்.,ல், ஆர்.சி., தெருவில் சாக்கடை அமைத்தல், அரங்கநாதன்பேட்டை சாலையிலிருந்து காவிரி ஆறு சாலை, சாக்கடை அமைத்தல் உள்பட பல பணிகளுக்கு பூமி பூஜை நடக்கிறது.