உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மோசமான நிலையில்சுகாதார வளாகம்

மோசமான நிலையில்சுகாதார வளாகம்

கிருஷ்ணராயபுரம்:வயலுார் பஞ்சாயத்தில் உள்ள சுகாதார வளாக கட்டடம், மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பஞ்சாயத்தில், சுகாதார வளாகம் உள்ளது. தற்போது வளாகத்திற்கு போதுமான அடிப்படை வசதி இல்லாமல் மோசமான நிலையில் காணப்படுகிறது. மேலும் கதவுகள் சிதிலமடைந்துள்ளது. இதனால் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, சுகாதார வளாகத்தை பயன்படுத்தும் வகையில் சரி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை