உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலை பகுதியில் கடும் பனிப்பொழிவு

குளித்தலை பகுதியில் கடும் பனிப்பொழிவு

குளித்தலை, டிச. 8-குளித்தலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான மருதூர், தண்ணீர் பள்ளி, ராஜேந்திரம், மணத்தட்டை, லாலாபேட்டை, பஞ்சப்பட்டி, அய்யர்மலை, தோகைமலை ஆகிய பகுதிகளில் நேற்று காலை, 7:30 மணி வரை கடும் பனிபொழிவு காணப்பட்டது.இதனால், கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி ஊர்ந்து சென்றனர். மலைப்பிரதேசங்களில் காணப்படும் கடும் பனிப்பொழிவு போல் இருந்ததால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி