கரூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
கரூர், ஜன. 3-கரூர் பழைய அரசு மருத்துவமனை அருகில், நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலுவலகத்திருந்து, இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி, இரண்டு சக்கர வாகன பேரணி நடந்தது. உதவி கோட்ட பொறியாளர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். ஊர்வலமானது கரூர் பழைய அரசு மருத்துவமனையில் தொடங்கி, கரூர் லைட் ஹவுஸ் கார்னர், கரூர் பஸ் ஸ்டாண்ட், மனோகரா ரவுண்டானா, திண்ணப்பா கார்னர் வழியாக நெடுஞ்சாலை துறை அலுவலகம் வந்தடைந்தது. பேரணியில், உதவி பொறியாளர் பார்த்தசாரதி உள்பட பலர் பங்கேற்றனர்.