மேலும் செய்திகள்
உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனை மையம் திறப்பு
11-Jun-2025
கரூர், உயர்கல்வி வழிகாட்டல் சிறப்பு குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், உயர்கல்வி வழிகாட்டல் சிறப்பு குறைதீர் கூட்டம் நாளை (25ம் தேதி) காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.2024--25ம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படித்த பிளஸ் 2 மாணவர்கள், 100 சதவீதம் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மேற்கொள்ள, உயர் கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டுஅறை செயல்பட்டு வருகிறது.பிளஸ் 2 தேர்வில் தேர்வு பெறாத மாணவர்களை, சிறப்பு துணைத் தேர்வு எழுத வைத்து தேர்ச்சி பெற வைப்பதற்கும் மற்றும் மாணவர்களின் கல்வி நலன் கருதி, அவர்கள் வைக்கும் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதற்கு கூட்டம் நடக்கிறது. இதில், மாணவ, மாணவியர் பங்கேற்று தகுந்த ஆலோசனை பெறலாம்.இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.
11-Jun-2025