உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூர், கரூர், செல்லாண்டிபாளையத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட அமைப்பாளர் சின்னச்சாமி தலைமை வகித்தார். நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும், பதவி உயர்வுக்கான தேர்வு பட்டியல் வெளியிட்டு, முரண்பாடுகள் இல்லாமல் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் விஜயகுமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மோகன கிருஷ்ணன், குணசேகரன், மாரிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை