கொடுத்த கடனை திருப்பி கேட்டவருக்கு பீர் பாட்டிலால் அடி
கொடுத்த கடனை திருப்பிகேட்டவருக்கு பீர் பாட்டிலால் அடிகரூர், அக். 29-கரூர் அருகே, கொடுத்த கடனை திருப்பி கேட்டவருக்கு பீர் பாட்டில் அடி விழுந்தது.கரூர் மாவட்டம், வெண்ணைமலையை சேர்ந்தவர் தேவராஜ், 45; இவர், அருகம்பாளையம் பகுதியை சேர்ந்த நெப்போலியன், 44; என்பவருக்கு, மூன்று மாதங்களுக்கு முன் வட்டிக்கு, 45 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். ஆனால் அவர் வட்டி, அசல் தொகையை திருப்பி தரவில்லை. இதனால் கடந்த, 26ல் நெப்போலியனை நேரில் சந்தித்து, தேவராஜ் கடனை திருப்பி கேட்டுள்ளார்.அப்போது, ஆத்திரமடைந்த நெப்போலியன், தேவராஜை பீர் பாட்டிலால் வலது கையில் அடித்துள்ளார். இதுகுறித்து, தேவராஜ் கொடுத்த புகார்படி, நெப்போலியனை வாங்கல் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.