உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சென்டர் மீடியனில் மோதிய கார் கணவன் பலி; மனைவி படுகாயம்

சென்டர் மீடியனில் மோதிய கார் கணவன் பலி; மனைவி படுகாயம்

கரூர்;தென்னிலை அருகே, கார் நிலை தடுமாறி தடுப்புச்சுவர் மீது மோதியதில், கணவன் உ யிரிழந்தார். மனைவிக்கு படுகாயம் ஏற்பட் டது.திருப்பூர் மாவட்டம், காங்கேயம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், 44; இவர் கடந்த, 16ம் தேதி இரவு, மனைவி லலிதா, 33, என்பவருடன் மாருதி காரில், கரூர்-கோவை சாலை வைரமடை பகுதியில் சென்று கொண்டிருந்தார். காரை சக்திவேல் ஓட்டியுள்ளார். அப்போது, கார் திடீரென நிலை தடுமாறி, எதிரே இருந்த சென்டர் மீடியனில் மோதியது. அதில், தலையில் படுகாயம் அடைந்த சக்திவேல், காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மனைவி லலிதாவுக்கு படுகாயம் ஏற்பட்டது.தென்னிலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை