உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கணவன் மாயம்; மனைவி புகார்

கணவன் மாயம்; மனைவி புகார்

கரூர், வெள்ளியணை அருகே, கணவனை காணவில்லை என, போலீசில் மனைவி புகார் செய்தார்.ஈரோடு மாவட்டம், பெரிய முத்துார் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 42. இவர் மனைவி மைதிலி, 37. இருவரும் கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே திருமலை நாதன்பட்டியில் தங்கி, தோட்ட வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த, 14ல் விவசாய தோட் டத்தில் இருந்து சென்ற கிருஷ்ணன், திரும்பி வரவில்லை. நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்கும் அவர் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மனைவி மைதிலி போலீசில் புகார் செய்தார். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை