உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்

குளித்தலை:குளித்தலை அடுத்த கல்லடை பஞ்., ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் லதா, 32; இடைப்பட்டி அங்கன்வாடி பள்ளியில் சமையல் உதவியாளர். இவரது கணவர் மோகன்தாஸ், 35, வாய் பேச முடியாது, காது கேட்காத மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு, கடந்த, 12 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த, 19 காலை, 7:30 மணிக்கு, மோகன்தாஸ் தோட்டத்தில் பூ பறிக்க கூலி ஆட்களை அழைத்துவருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், லதா அளித்த புகார்படி, தோகைமலை போலீசார், மோகன்தாஸை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ