மேலும் செய்திகள்
சிறுமியுடன் நிச்சயம்; வாலிபர் மீது வழக்கு
09-Nov-2024
சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ
30-Oct-2024
குளித்தலை: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துாரை சேர்ந்த, 16 வயது சிறுமி ஈரோட்டில் உள்ள கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். குளித்தலை அடுத்த, செம்பியாநத்தம் நாயக்கனுாரை சேர்ந்த சரத்குமார், 21, என்பவர் கடந்த ஆக., 16ல் நாயக்கனுாரில் உள்ள விநாயகர் கோவிலில் சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.கடவூர் ஊர்நல அலுவலராக பணிபுரிந்து வரும் முருகாம்பாள், சைல்ட் லைன் பணியாளர் சிவசங்கரி, வி.ஏ.ஓ., பிரான்சிஸ் மற்றும் பணியாளர்களுடன் இணைந்து கள விசாரணை செய்த போது, சிறுமியை அவரது பெற்றோர் சம்மதத்துடன் சரத்குமார் திருமணம் செய்தது தெரியவந்தது.ஊர்நல அலுவலர் கொடுத்த புகார்படி, குளித்தலை மகளிர் போலீசார் சரத்குமார், அவரது தந்தை முத்துசாமி, தாய் மூக்காயி ஆகிய மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இதேபோல், குளித்தலை அடுத்த சீத்தப்பட்டி பஞ்., தேவர் மலையை சேர்ந்த முருகேசன் மகன் ஸ்ரீகாந்த், 21. இவர், 16. வயது சிறுமியை கடந்த மார்ச், 20ல் தேவர்மலை நரசிம்ம பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். மாவட்ட சைல்ட் லைனுக்கு வந்த ரகசிய தகவல்படி, கடவூர் ஊர்நல அலுவலர் முருகம்பாள், தேவர்மலை வி.ஏ.ஓ., கார்த்திக், பணியாளர் சங்கீதா ஆகியோருடன் இணைந்து கள விசாரணை செய்ததில், சிறுமியை திருமணம் செய்தது தெரிய வந்தது.இது குறித்து ஊர் நல அலுவலர் கொடுத்த புகார்படி, சிறுமியை திருமணம் செய்த ஸ்ரீகாந்த் மீது, குளித்தலை மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
09-Nov-2024
30-Oct-2024