மாநகராட்சி மண்டல அலுவலக கட்டடம் இன்று திறப்பு விழா
கரூர், கரூர் மாநகராட்சி சார்பில், மண்டல அலுவலகங்கள் கட்டட திறப்பு விழா இன்று (26ம் தேதி) நடக்கிறது.கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி கட்டடங்களை திறந்து வைக்கிறார். கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின், நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு சொந்த கட்டட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அதன் அடிப்படையில், கரூர் மாநகராட்சி, 1வது மண்டலத்துக்கு பெரிய குளத்துப்பாளையத்தில், 2.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அலுவலக கட்டடமும், இரண்டாவது மண்டலத்துக்கு, கரூர் பசுபதிபுரம் தெற்கு மடவிளாகத்தில், 2.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அலுவலக கட்டடமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, இன்று மாலை, 4:00 மணியளவில் நடக்கிறது.