உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மொபைல் பேசியபடி வாகனங்களில் செல்வதால் விபத்துகள் அதிகரிப்பு

மொபைல் பேசியபடி வாகனங்களில் செல்வதால் விபத்துகள் அதிகரிப்பு

கரூர், மொபைல் போனில் பேசியபடி, இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், விபத்துகளும் கூடி வருகிறது.கரூர் மாநகராட்சியை ஒட்டி சேலம், கரூர்-திருச்சி, மதுரை மற்றும் நாமக்கல் பகுதிகளுக்கு பைபாஸ் சாலை செல்கிறது. கரூரை இணைக்கும் வகையில், மாவட்ட சாலைகள் அதிகளவு உள்ளன. இந்நிலையில், இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மொபைல்போன் பேசியபடி வாகனங்களில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.ஹெல்மெட் இன்றி வாகனம் ஓட்டுவது, மொபைல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்கள் மீது போலீசார் வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாததால், பெரும்பாலான ஓட்டுனர்கள் மொபைல்போன் பேசியபடியே செல்கின்றனர். இதனால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. போன் பேசியபடி செல்லும் போது, நமது கவனம் சிதறி விடுவதால், அசம்பாவிதங்கள் நடந்து விடுகிறது.எனவே, போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி, மொபைல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை