கரூர் ரயில்வே ஸ்டேஷனில் நாய்கள் தொந்தரவு அதிகரிப்பு; பயணிகள் பீதி
கரூர்: கரூர் ரயில்வே ஸ்டேஷனில் சுற்றி திரியும் நாய்களை விரட்-டாமல், ரயில்வே நிர்வாகத்தினர் அலட்சியமாக உள்ளனர். இதனால், பயணிகள் மற்றும் குழந்தைகள் கடும் பீதியில் உள்-ளனர்.தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலாக உள்ள, கரூர் ரயில்வே ஸ்டேஷனில் நாள் தோறும், 25 க்கும் மேற்பட்ட ரயில்கள் நின்று செல்கின்றன. குறிப்பாக, கரூர்-சேலம் வழித் தடத்தில், வந்தே பாரத் உள்ளிட்ட புதிய ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால், பய-ணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கரூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள அனைத்து பிளாட்பாரங்களிலும், 25 க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிந்த வண்ணம் உள்ளது. இதை விரட்ட ரயில்வே நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக உள்ளனர். குறிப்பாக, பயணிகள் குழந்தைகளுடன், ரயில்களுக்காக காத்திருக்கும் அறையிலும், நாய்கள் படுத்து உறங்-குகிறது. நாய்களை விரட்ட முயற்சிக்கும் போது, பயணிகளை கடிக்க பாய்கிறது. இதனால், கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.எனவே, கரூர் ரயில்வே ஸ்டேஷனில் சுற்றி திரியும் நாய்களை விரட்ட, ரயில்வே நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.