கரூர் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கோலாகலம்
கரூர், கரூர் மாவட்ட அரசு விளையாட்டு அரங்கில், நாட்டின் 79 வது சுதந்திர தினவிழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.கரூர் மாவட்ட அரசு விளையாட்டு அரங்கில் நடந்த, சுதந்திர தினவிழாவில் நேற்று காலை, 9:05 மணிக்கு கலெக்டர் தங்கவேல், தேசியக்கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்கள் கவுரவிக்கப்பட்டனர்.பிறகு, காவல் துறை உள்ளிட்ட, பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பதக்கம் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, பல்வேறு துறைகள் சார்பில், 31 பயனாளிகளுக்கு, 54 லட்சத்து, 12 ஆயிரத்து, 930 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.விழாவில், எஸ்.பி., ஜோஸ் தங்கையா, டி.ஆர்.ஓ., கண்ணன், குளித்தலை உதவி கலெக்டர் சுவாதி ஸ்ரீ, கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.* கரூர், கொளந்தா கவுண்டனுாரில் தேவி அரசு உதவி பெறும் பள்ளியில், சுதந்திர தின விழா நடந்தது. 19வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் அருள்மணி, தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி நிர்வாகி காமராஜ், தலைமையாசிரியர் ராஜா, இடைநிலை ஆசிரியர் ஜெயபாரதி உள்பட பலர் பங்கேற்றனர்.* லயன்ஸ் கிளப் ஆப் கரூர் சார்பில், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அருகில், தலைவர் சிந்தன் தேசியக்கொடியை ஏற்றினார். செயலர் சிவக்குமார், மண்டல தலைவர் பசுபதி, வட்டார தலைவர் வெங்கட்ராமன், பி.ஆர்.ஓ., மேலை பழனியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.* கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட தலைமை நீதிபதி இளவழகன், தேசியக் கொடியை ஏற்றினார். மகளிர் நீதிமன்ற நீதிபதி தங்கவேல், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரகாஷ், உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தாரணி, வழக்கறிஞர்கள் குடியரசு, குணசேகர், சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.* கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., வளாகத்தில், தேசியக்கொடி ஏற்றப்பட்டது. டவுன் பஞ்., தலைவர் சேதுமணி தலைமை வகித்தார். துாய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கவுன்சிலர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. டவுன் பஞ்., துணைத் தலைவர் வளர்மதி, கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.* கரூர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தேசியக்கொடியை ஏற்றினார். பிறகு பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, இணை செயலர் மல்லிகா, பொருளாளர் கண்ணதாசன், எம்.ஜி.ஆர்., மன்ற இளைஞர் செயலர் தானேஷ் முத்துக்குமார், சிறுபான்மை செயலர் முகமது இப்ராஹீம், பகுதி செயலர்கள் சுரேஷ், தினேஷ், சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.* குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்.,ல், துணைத்தலைவர் அன்பழகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். கவுன்சிலர் செந்தில்வேலன், அலுவலக பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள். மாணவர்கள் கலந்து கொண்டனர்.மருதுார் டவுன் பஞ்.,ல் தலைவர் சகுந்தலா கொடியேற்றினார். குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் துணைத்தலைவர் கணேசன், கமிஷனர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலையில், தலைவர் சகுந்தலாபல்லவிராஜா கொடியேற்றினார். குளித்தலையில் உள்ள காந்தி சிலைக்கு சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ, தாசில்தார் இந்துமதி மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.* அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பள்ளப்பட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அரசு பள்ளிகள் உள்பட பல்வேறு தனியார் பள்ளிகள், பேரூராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், பள்ளப்பட்டி நகராட்சி அலுவலகங்களில்