உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஈங்கூர் மகரிஷி பள்ளி மாணவி மாநில கிரிக்கெட் அணிக்கு தேர்வு

ஈங்கூர் மகரிஷி பள்ளி மாணவி மாநில கிரிக்கெட் அணிக்கு தேர்வு

ஈங்கூர் மகரிஷி பள்ளி மாணவிமாநில கிரிக்கெட் அணிக்கு தேர்வுசென்னிமலை, நவ. 27-தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் விளையாட, ஈங்கூர் மகரிஷி பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னிமலையில் இருந்து பெருந்துறை செல்லும் சாலையில் உள்ள ஈங்கூரில், மகரிஷி வித்யா மந்திர் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளி யில் பெருந்துறை, திருவேங்கிடம்பாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல்-சரண்யா தம்பதியரின் மகள் திக்ஷா, 13, எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், 15 வயதுக்குட்பட்டோருக்கான தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். திக்ஷா தனது எட்டு வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு பெற்ற மாணவி திக்ஷாவிற்கு, மகரிஷி பள்ளி தாளாளர் பிரவீன், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை