க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தல்
அரவக்குறிச்சி: கரூரிலிருந்து, கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், வளர்ந்து வரும் பகுதியாக க.பரமத்தி உள்ளது. க.பரமத்தி யூனி-யனில், 30 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை-யையொட்டி கிராம பஞ்சாயத்துகள் உள்ளதால், அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. சாலை விபத்து, தீவிபத்து, தீ விபத்து-களால் உயிரிழப்பு போன்றவற்றை தடுக்க க.பரமத்தியில் தீய-ணைப்பு நிலையம் இல்லை.கரூர், அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையத்தில் இருந்து தீய-ணைப்பு வாகனங்கள் வருகின்றன. சம்பவ இடத்திற்கு செல்ல நீண்ட நேரமாவதால் உயிர் சேதம், பொருட்சேதம் அதிகளவில் ஏற்படுகின்றன. எனவே, க.பரமத்தி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.