உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சம்பா நெல் பயிர்களுக்கு நவ., 15க்குள் காப்பீடு

சம்பா நெல் பயிர்களுக்கு நவ., 15க்குள் காப்பீடு

கரூர், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் நவ.,-15க்குள், சம்பா நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில், 2025 சிறப்பு பருவத்தில் நெல், மக்காச்சோளம் பயிர்களும், 2025 ராபி பருவத்தில், நிலக்கடலை, சோளம், கரும்பு பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டு அரசாணை வழங்கப்பட்டுள்ளது.இதில், வி.ஏ.ஓ.,வின் நடப்பு சாகுபடி அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகள் ஆகியவற்றில் பிரீமியத் தொகை செலுத்தலாம். சிறப்பு பருவ பயிர் காப்பீட்டில், சம்பா நெல் பயிர் ஒரு ஏக்கருக்கு, 570.57 ரூபாய், மக்காச்சோளம் ஒரு ஏக்கருக்கு, 474.24 ரூபாய் காப்பீட்டு கட்டணமாக செலுத்த வேண்டும். ராபி பருவ பயிர் காப்பீட்டில், சோளம் பயிர் ஒரு ஏக்கருக்கு, 107.94 ரூபாய், நிலக்கடலை, 492.02 ரூபாய், கரும்பு பயிர் ஒரு ஏக்கருக்கு, 1,304.16 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும்.சிறப்பு பருவத்தில் நெல் பயிருக்கு நவ., -15க்குள், மக்காச்சோளம் பயிருக்கு டிச.,-2க்குள், ராபி பருவத்தில் சோளம் பயிருக்கு டிச.,-16க்குள், நிலக்கடலைக்கு, 2026 ஜன.,- 31க்குள், கரும்பு பயிருக்கு 2026 மார்ச்- 31க்குள் செலுத்த வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் அல்லது வங்கி கிளைகளையோ அணுகலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ